அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி
மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி
முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய
அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்காக
அடைவுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வு 3, 5 மற்றும் 8ம் வகுப்பு
மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. இதற்காக, வட்டார அளவில் 10
மாணவர்களுக்கு குறையாமல் உள்ள தலா 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பட்டியல், அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனநரகத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அடைவுத் தேர்வுக்கான நாள்
அறிவிக்கப்படவுள்ளது.
Useful of all the students
ReplyDelete