Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குளிர் காலத்தில் தாக்கும் முகவாதம் : எச்சரிக்கை ரிப்போர்ட்


facial palsy           அழகான முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய் கோணல் ஆகிவிடும். கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற்பட்டாலே முகவாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

           அதிகாலையில் பனியில் வெளியில் செல்வோரின் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். காது வழியாக ஊடுருவும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது.

இந்நோய் குளிர் காலத்தில் மட்டும் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள் மாதவிடாய் காலங்களில் உடல் பலவீனமாகும்போது முகவாதம் ஏற்படும்.

நகர்ப்புறங்களில் பனியில் வேலைக்குச் சென்று திரும்புவோரையும், கிராமங்களில் மலையடிவாரங்களில் உள்ள மக்களையும் இது தாக்குகிறது. ஆண்களைவிட பெண்களையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது. பனியில் பஸ்சிலோ ரயிலிலோ, பயணம் செய்யும்போது, பனிகாற்று ஊசிபோல் காதில் பனி ஊடுருவாத வகையில் ‘மப்ளர்’ கட்டிச் செல்ல வேண்டியது அவசியம்.

நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள சிறு குழந்தைகளுக்கு கூட முகவாதம் வரும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு உடல் பலவீனமடையும் காலங்களில் முகவாதம் எளிதில் தாக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்ணை மூட இயலாமல் போகும். உணவு சாப்பிடும்போதோ, திரவ ஆகாரங்கள் சாப்பிடும்போதோ, அனைத்தும் வெளியே கொட்டிவிடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் பலரும் காலை, மாலை நேரங்களில் தலைக்கு ‘மப்ளர்’ கட்டியபடி செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

குளிர் காலத்தில் ஆக்சிஜன் குறைவாகக் கிடைப்பதால் அதிகாலையில் முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சத்தான உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். குளிர்காலங்களில் பெண்கள் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளை விட, இந்தாண்டு முகவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறும் மருத்துவர்கள் இந்த நோயை 15 நாட்களுக்குள் குணப்படுத்திவிட முடியும் என்று கூறியுள்ளனர். உடலில் பலம் குறைவதால் அங்கத்தில் ஏற்படும் ஒரு குறைபாடு தான் இது. எனவே சரியான முறையில் சிகிச்சை பெற்றால் பூரணமாக குணமடைந்துவிடலாம் என்று கூறியுள்ளனர்.

முகவாதம் வந்தவர்கள் குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்த்து விட வேண்டும். ஐஸ்கிரீம், ப்ரிட்ஜ்ஜில் வைத்த உணவுப்பொருட்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அதேபோல் தயிர் உள்ளிட்ட புளிப்பான உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும், அதேபோல் மஞ்சள் பூசணிக்காயை உண்ணக்கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முக வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கீரை போன்ற இலைக்காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமானது. மேலும் அரிசி உணவுகளை விட கோதுமையில் செய்த உணவுப்பொருட்களை உட்கொள்ளலாம். அதேபோல் எருமைப் பாலை விட பசுவின் பாலை உட்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும், மது, சிகரெட் போன்றவைகளை எந்த சூழ்நிலையிலும் தொடவே கூடாது. அதை கண்டிப்பாக தவிர்த்து விடவேண்டும் என்பதும் நிபுணர்களின் அறிவுரையாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive