ஆசிரியர் தகுதித் தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல்
பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,)
அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு உரிய பதில்
அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை டி.ஆர்.பி., அமைத்துள்ளது.
அவர்களை சமாளிக்கும் வகையில் அலுவலக வாயிலில், பணியாளர் ஒருவரை
நியமித்து தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற டி.ஆர்.பி., நடவடிக்கை
எடுக்கும். அந்த வகையில் தற்போது, டி.இ.டி., தேர்வில் எழுந்துள்ள
பிரச்னைகள் காரணமாக தேர்வர்கள் ஏராளமானோர், தினமும் டி.ஆர்.பி.,க்கு
சென்றபடி உள்ளனர். தற்காலிக விடைகளை வெளியிட்ட போதே தவறான விடைகளை
ஆட்சேபித்து, ஏராளமான தேர்வர்கள் விண்ணப்பம் அளித்தனர்.
"இதை ஆய்வு செய்து இறுதி விடைகளை வெளியிடும்போது, உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்" என, டி.ஆர்.பி., பதிலளித்தது. ஆனால், நவ., 5ம் தேதி வெளியான
டி.இ.டி., தேர்வு முடிவுடன் கூடிய இறுதி விடையில், சரியான விடைகள்
பலவற்றுக்கு உரிய மதிப்பெண் வழங்காதது, தேர்வர்களுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு, சென்றபடி உள்ளனர்.
தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று உரிய பதில் அளிப்பதற்கு
ஏதுவாக அலுவலக வாயிலில் குறை கேட்பு மையம் ஒன்றை டி.ஆர்.பி., அமைத்துள்ளது.
இங்குள்ள பணியாளர் தேர்வர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து,
விண்ணப்பங்களை பெற்று வருகிறார். சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்காதது
குறித்தும், சரியான விடை என்பதற்கான ஆதாரங்களையும், விண்ணப்பத்துடன்
இணைத்து தேர்வர்கள் வழங்கி வருகின்றனர்.
எனவே இந்த விண்ணப்பங்கள் மீது மீண்டும் ஒருமுறை, டி.ஆர்.பி., ஆய்வு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது
in case that question answer should be right... what about result 89 or 90?
ReplyDeletetnpc or trb exam. must give result with in a week other wise you meet much more problem. delay is lead to malpractice public well knowing that. You don't give time to public about the examination.
ReplyDeleteThe government, honorable chief minister and honorable high court judge give order to TNPC and TRB board When ever conduct the exam. must give result with in a week other wise don't conduct the examination . please please give instruction to the TNPC and TRB .
En sir poi soldringa. Toll free numberku cl panuna edukurathu ila response panala, ena sir manu koduthom athukachum rep varuma? Therila. 88 mark nan but 92 varum 4 questionku answer change panala trb. Panuvangala? Unmaya xam eluthunom but answer olunga vidama en sir enga life waste panranga trb. Plz sir correctana answer vidunga fail analum paravala
ReplyDeleteI have got 89 in paper II.Is there any chance to get 90.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete