லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014
ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப,
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை
தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
ஓட்டுச்சாவடி செயல்படும் பள்ளிகளின் கட்டட
தரம், சாய்தளம், பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்ப, தேர்தல்
கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த லோக்சபா. சட்டசபை தேர்தல்களின் போது,
ஓட்டுச்சாவடிகளில் நடந்த அசம்பாவிதங்கள் விபரங்களையும் சேகரித்து அனுப்ப
வேண்டும்.
லோக்சபா தேர்தல்:
2014 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாவட்ட
தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள், 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு
விடுமுறை, மாவட்ட வாரியாக விடப்படும் உள்ளூர் விடுமுறை குறித்த விபரங்களை
வழங்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் முதற்கட்ட பணியாக,
தேர்தல் அறிவித்த நாள் முதல், கட்சிகள் "டிவி'களில் விளம்பரங்கள் செய்தால்,
அவற்றை செலவு கணக்கில் ஏற்ற, "டிவி' விளம்பரங்களை கண்காணிக்கும் குழுவை
மாநில, மாவட்ட அளவில் ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...