Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு


           தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 

         ஏராளமான ஆசிரியர்கள் தேர்வை எழுதினாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி விகிதம் இருந்தது. இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு(தாள் 1) தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு(தாள் 2) தனியாகவும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. முதல்தாள் தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி 687 மையங்களில நடந்தது. 

              தாள் 2க்கான தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி 1070 மையங்களில் நடந்தது. இரண்டு தேர்வுக்கான கீ-ஆன்சர் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடப்பட்டது. 

              பின்னர், கேள்வித்தாள் மற்றும் விடைகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படி வாரியம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை 2 லட்சத்து 62,187 பேர் எழுதினர். அதில் 12,596 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 

              மொத்த தேர்ச்சி சதவீதம் வெறும் 4.8 மட்டுமே. புதுச்சேரியில் தாள் 1ல் மொத்தம் 3857 பேர் எழுதினர். 181 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 4.69. பட்டதாரிகளுக்கான தகுதி தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அவர்களில் 14,496 பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். 

               தேர்ச்சி வீதம் வெறும் 3.62. புதுச்சேரியில் பட்டதாரி தேர்வில் மொத்தம் 4,314 பேர் எழுதினர். அவர்களில் 58 பேர் மட்டுமே 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 1.4 மட்டுமே. கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்பு வேலையில் சேர்ந்த ஆசிரியர்களும், புதிதாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களும் எழுதிய தேர்வில்தான் இந்த அதிர்ச்சிகரமான முடிவு.

                எனவே ஆண்டுதோறும் தகுதி தேர்வை நடத்தினால் மட்டும் போதாது. தகுதி தேர்வின் அடிப்படை சரியில்லையா அல்லது ஆசிரியர்களின் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளதா என்பதை கல்வித் துறை ஆராய வேண்டும்.




9 Comments:

  1. கடைசி பாரா சரிதானே?

    ReplyDelete
  2. nan ug pg bed maths la above 90% but yanala tet la pass pana mudiyala apa yanaku onnum theriyatha ? most of them pass in just luck.the test must be conducted their own subject .that is only correct way

    ReplyDelete
  3. science and maths graduates saarba court la case file panna enna

    ReplyDelete
  4. ug pg la 90% edukkura neenga tet la 60% edukkuradhu kastam illaiye be confident ellame kastam than sir nanum than 12 thla 86% ug la 80% b.ed la 89% but tetla 62% than enna panradhu kastappattal than palan kidaikkum luckala ellarukkum ellamum kidaikkadhu sir

    ReplyDelete
  5. கல்விதரம் நன்றாக உள்ளது மாணகவர்களை உருவாக்கும் முறை தான் சரியில்லை. காரணம் மனப்பாடத்தை ஊக்குவிக்கும் எந்த முறை கல்வியும் போட்டித்தேர்விற்கு பயன்படாது. அது டாக்டர்களையும் எங்ஜினியர்களைய்ம் தான் உருவக்கும். மாணவர்களை புரிந்து படிக்கும் விதமாக உள்ள செயல் வழிக் கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் கல்வி முறையை சரியாக ஆசிரியர்கள் கற்பித்தால் வருங்கால மாணவர்களாவது போட்டித் தேர்வின் மூலம் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.

    ReplyDelete
  6. பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படைப்பாற்றால் கல்வி முறை வெறும் சம்பிரதாயமாகவே உள்ளது ஆசிரியர்கள் பாடங்களை மனப்பாடம் செய்யவே ஊக்கப் படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு கண்டிப்பாக கேள்வித்தாள் முறையையும் படைப்பாற்றல் கல்வி மூறையை அமல்படுத்தும் விதமாக பாடப்பகுதியின் எந்தப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்டாலும் பதில் ஏழுதும் விதமாக மாற்றியமக்கவேண்டும்.

    ReplyDelete
  7. Malaicharal sollvathu 100 % unmai palli vayathilirunthe varikku vari padithu vidai allikum pazhakam erunthirunthaal naangal eppothu just miss(89) ill teacher post i ezhanthu naraga vethanai padavendam.

    ReplyDelete
  8. In the first TET exam I got 91 marks in paper I and I went for certifciate verfication and I was not selected because I am a B.Ed graduate and not D.T.Ed. Last time I got 89 marks in TET II paper. Now I have got 101 marks. So, if you try you can win.

    ReplyDelete
  9. Dear Velmurugan,
    Please go through the following.You may realize the TRUTH


    ஆசிரியர் தகுதித்தேர்வில் 2ம் இடம் தோல்வியை கண்டு துவளாத திண்டுக்கல் மாணவி சாதனை.

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆக. 17, 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடந்தது. இதில் சுமார் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கான
    முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.

    இடைநிலை ஆசிரியர் பிரிவில் மாநில அளவில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சத்யா (25) இரண்டாம் இடம் பெற்றுள்ளார். கணவர் ராமசாமியுடன் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் வசிக்கும் சத்யா கூறியதாவது:

    பிஎஸ்சி படித்துள்ள நான் ஆசிரியர் பணி மீதுள்ள ஆர்வத்தால் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். கடந்த இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தோல்வியை தழுவினேன். இருப்பினும் நம்பிக்கையுடன் 3வது முறை எழுதி 150க்கு 122மதிப்பெண் பெற்றுள்ளேன். பாடங்களை புத்தகத்தில் நேரடியாக படிப்பதைவிட அதில் உள்ள முக்கிய வரிகளை குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வேன். கடைசி நேரத்தில் அதை மட்டும் நன்கு படித்தால் மனதில் தங்கிவிடும்.எதிர்மறை சிந்தனையின்றி நம்மாலும் முடியும் என்று உத்வேகத்துடன் முயற்சித்தேன். வழக்கமான வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்து விட்டு, கிடைக்கும் நேரத்தில் ஆழ்ந்து படித்தேன். படித்ததுடன் கோச்சிங் சென்டருக்கும் சென்று பயிற்சி பெற்றேன். இதுவே எனது வெற்றிக்கு வழிவகுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive