Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள்..!


              பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது. 
 
          பிளாஸ்திரி, பேன்டேஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். * நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள். * எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
 
           * விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும். * ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும். * சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். 
 
             அந்தக் கொப்புளங்களின் மீது 'ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும். * தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும். * கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும். * தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது. * இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம். * தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம். * தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive