விடுதியில் மாணவனை, மாணவனே கொலை செய்ததையடுத்து, மாநிலம் முழுவதும்
விடுதிகளில் வார்டன்களை உஷார்படுத்தவும், கண்காணிக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை விடுதி காப்பாளரிடம் மாணவன் தெரிவித்து விடுவான் என்று பயத்தில்,
மாணவனை செப்டிக் டேங்கில் தள்ளி கடந்த சில நாட்களுக்கு முன்பு, 10ம்
வகுப்பு மாணவன் கொலை செய்தார். இதையடுத்து அந்த பள்ளியின் விடுதியை
மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுதியை கண்காணிக்க உத்தரவு: திண்டுக்கல் விடுதியில் பள்ளி மாணவன் கொலை
செய்யப்பட்ட சம்வத்தையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி விடுதிகளை
தலைமை ஆசிரியர்களும், வார்டன்களும் தொடர்ந்து கண்காணிக்கவும்,
மாணவர்களுக்கு பிரச்னைகளை உடனடியாக தீர்க்கவும், விடுதியில் தங்கி படிக்க
விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும்.
விடுதியில் மாணவர்களின் மன உளைச்சல்கள் குறித்து தனித்தனித்தயாக
கருத்துக்கள் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
அறிவுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறியதாவது:
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்தி, விடுதிகளை பராமரிப்பது
குறித்தும், மாணவர்களின் பிரச்னைகளை தீர்வு காண்பதற்கு அரசு
அறிவுத்தியுள்ளது. பள்ளி மாணவன் கொலை நடந்த பள்ளி விடுதியை மூடுவதற்கு நான்
உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...