2014ம் ஆண்டின் ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம், ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யப்படும் நாட்டின் முதல்
பெரிய தேர்வாக JEE தேர்வு திகழவுள்ளது.
இந்த ஆன்லைன் விண்ணப்ப செயல்பாட்டை, வரும் நவம்பர் 15ம் தேதி முதல்
அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள், தங்களின்
புகைப்படம், கையெழுத்து மற்றும் பெருவிரல் ரேகை உள்ளிட்ட அம்சங்களை JPEG
-ல் மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை நிறைவுசெய்த பிறகு, ஸ்கேன் செய்யப்பட்ட இமேஜ்களை
upload செய்ய வேண்டும். பின்னர், தேர்வு கட்டணத்தை debit or credit
அட்டைகளின் மூலம் செலுத்த வேண்டும். இதன்பிறகு, acknowledgement slip
வரும். அதை பிரின்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான்
உங்களுக்கான அத்தாட்சி. அதேசமயம், தேர்வுக் கட்டணததை பட்டியலிடப்பட்ட வங்கி
கிளைகளிலும் செலுத்தலாம். இதற்கு ஆன்லைனில் பெறப்பட்ட e-challan ஐ
பயன்படுத்த வேண்டும்.
JEE தேர்வில் முதல் தாள்(பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளுக்கு)
மற்றும் இரண்டாம்தாள்(பி.ஆர்க்., பி-பிளானிங்) ஆகிய பிரிவுகள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவுக்கு தலா 3 மணி நேரங்கள் ஒதுக்கப்படும். முதல் தாளை ஆன்லைன்
மற்றும் ஆப்லைன் முறைகளில் எழுதலாம். ஆனால் இரண்டாம் தாளை ஆப்லைன் முறையில்
மட்டுமே எழுத முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...