அலிகார்: உத்தர பிரதேச மாநிலத்தில்
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப் டாப் கம்ப்யூட்டர்கள்
இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுவது
பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை
உயர்த்துவதற்காக விலையில்லா லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்க மாநில முதல்வர் அகிலேஷ்
யாதவ் தலைமையிலான மாநில அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், லக்னோ மற்றும்
வாரணாசி பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச மடிக்கணிணிகளை ஆன்
லைனில் விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ஆன்-லைனில் பொருட்களை வாங்கவும் விற்பதற்காகவும்
உள்ள "ஓ.எல்.எக்ஸ்" என்ற வலைத்தளத்தில் "அகிலேஷ் லேப் டாப்"
என்று பெயரிடப்பட்ட இந்த மடிக்கணிணிகளை விற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன் படி லக்னோவில் வசிக்கும் மாணவர் அகமது லேப் டாப்பை ரூ.5,999 க்கு விற்பதற்கும், வாரணாசி ஒய்.பி.சோனு மற்றும் சிலரும் தங்களுக்கு வழங்கப்பட்ட "அகிலேஷ் லேப் டாப்"பை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த லேப் டாப்களை வாங்குவதற்கு பலர் முன்வந்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...