இயற்கை இடர்பாடுகளால், மாவட்ட நிர்வாகம் விடும்
உள்ளூர் விடுமுறையில், பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கல்வித் துறை எச்சரித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும்
நாட்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளித்து, கலெக்டர்
உத்தரவிடும்போது, கல்வி நிறுவனங்கள், கண்டிப்பாக, அவற்றை பின்பற்ற வேண்டும்
என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கல்வித் துறையின் உத்தரவில், "மழைக்காலங்களில்
பள்ளி கட்டடங்களின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம்
ஏற்பட்டால், முதன்மைக் கல்விஅலுவலருக்கு தகவல் தர வேண்டும். இயற்கை
இடர்பாடுகளுக்காக, மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும், உள்ளூர் விடுமுறை
தினத்தில், பள்ளிகளை திறக்கக் கூடாது. மழைக்காலங்களில், Nov மாணவர்கள்,
பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும்' என, கூறப்பட்டு
உள்ளது.
Minotrity schools like muslim area govt schools were worked on all sundays.nobody anounced emergency leave for that type of schools.baskar.pattukkottai.
ReplyDelete