தேசிய
திறனாய்வு தேர்வில்(என்.டி.எஸ்.,) பங்கேற்க அரசு பள்ளி மாணவர்கள்
மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், உரிய பயிற்சிகளை வழங்கவும், முதன்மை
கல்வி அதிகாரி ஞானகவுரி பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தேர்வின் இரண்டு நிலைகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, பிளஸ் 1 முதல்
ஆராய்ச்சி படிப்பு வரை மாதந்தோறும் உதவித்தொகை தேசிய கல்வி மற்றும்
ஆராய்ச்சிக் கழகம் வழங்குகின்றது. இத்தேர்வில்,பெரும்பாலும் தனியார் பள்ளி
மாணவர்களின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள்
பங்கேற்பது என்பது அரிதானது, அவ்வாறு பங்கேற்கும் மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர் என்பது இதுவரை இல்லை.
பெரும்பாலும், சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில், இத்தேர்வை 1606 மாணவர்கள் எழுதினர். இதில், அரசு பள்ளிகளில் இருந்து வெறும் 467 மாணவர்களே பங்கேற்றனர்.
மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 63 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், பல
பள்ளிகளில் இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு பள்ளி ஆசிரியர்கள் இடையே
இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. கோவை மாவட்டத்தை ஒப்பிடுகையில், பிற
மாவட்டங்களில், இத்தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப
எண்ணிக்கையில் உள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ""மாணவர்கள் மத்தியில் போதிய
தன்னம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம். போதிய பயிற்சிகள் அளித்தால், அரசு
பள்ளி மாணவர்களும் இத்தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற முடியும்.
""வரும் ஆண்டுகளில், இத்தேர்வுக்கான பயிற்சிகளை அதிகரிக்க
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை ஆரம்பம் முதலே தன்னம்பிக்கை
அளித்து தேர்வுக்கு தயார்படுத்த அறிவுறுத்தப்படவுள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...