மொபைல் போன் மூலம் ஆங்கிலம் கற்பதற்கு புதிய
மென்பொருளை, பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக, "அப்ளைடு
மொபைல் லேப், ஏ.ஏ.எஜுடெக்" ஆகிய நிறுவனங்களுடன், பிரிட்டிஷ் கவுன்சில்
ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆங்கிலம் கற்பதற்கான புதிய மென்பொருளை அறிமுகம்
செய்து, பிரிட்டிஷ் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் டேவிட்சன்
கூறியதாவது: இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. இந்தியர்களின் ஆங்கில தேவையை
அறிந்து, அதற்கேற்ப, ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். இந்தியாவின்
பெரும்பகுதி மக்களிடம், ஆங்கிலத்தைக் கொண்டு செல்ல, மொபைல் போன் மற்றும்
இணையதளங்களை பயன்படுத்துகிறோம்.
"மொபைலில் ஆங்கிலம்" என்ற மென்பொருள் அறிமுகம்
செய்யப்படுகிறது. இதன்மூலம், இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும், தொலைபேசி
மூலம், ஒரு வார்த்தையை சொல்வது அல்லது எஸ்.எம்.எஸ்., அனுப்பினால்,
அதன்மூலம் ஆங்கில உரையாடலை அறியலாம். இத்திட்டத்தில், ஆரம்ப நிலை, இடைநிலை,
முன்னேறிய நிலை என மூன்று நிலைகள் உள்ளன.
மொபைல் மூலம், ஆங்கிலம் கற்றோரின் தகுதியை,
பிரிட்டிஷ் கவுன்சில் அறிந்து, அவர்களுக்கு சான்றிதழ் அளிக்கிறது. இதற்கு,
"அப்ளைடு லேப், ஏ.ஏ. எஜுடெக்" ஆகிய நிறுவனங்களின் மென்பொருள் உதவுகிறது.
இவ்வாறு, மார்ட்டின் டேவிட்சன் கூறினார். அப்ளைடு மொபைல் லேப் தலைமை
நிர்வாக அதிகாரி, மிரிகங்க திரிபாதி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர், விழாவில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...