தொலைநிலைக் கல்வி முறையில், சில பாடங்கள்
பற்றி, மாணவர்களால் சுயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அந்த தலைப்புகளை,
கருத்தாக்க ரீதியில் புரிந்துகொள்ளவும், அந்த பாடத்திட்டத்தில் அடங்கியுள்ள
அம்சங்களை எப்படி படிப்பது என்பது குறித்தும் ஒரு தெளிவு அனைத்து
மாணவர்களுக்கும் ஏற்படுவதில்லை.
உதாரணமாக, அரசியல் அறிவியல் என்ற பாடத்தை,
தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளும் மாணவர்கள் சிலர், அப்பாடத்திற்கு
ஒரு ஆர்வம் மிகுதியால் விண்ணப்பித்திருக்கலாம். ஆனால், அதிலுள்ள
உள்ளடக்கத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம் மற்றும் அதைப்
பற்றிய ஒரு பொதுவான தெளிவுபெற சிரமப்படலாம். அரசியல் அறிவியல் என்ற ஒரு
தலைப்பை, கருத்தாக்க ரீதியில் புரிந்துகொள்ள கடினமாக இருக்கலாம்.
எனவே, அதைப் பற்றிய தெளிவு பெறுவதற்கு, ஒரு
நல்ல வழிகாட்டுதல் தேவைப்படும். பல பல்கலைக்கழகங்கள், வார இறுதிநாள்
வகுப்புகளை நடத்தும். இந்த வகுப்புகளில் கலந்துகொண்டு, பேராசிரியர்களின்
மூலமாக, நமது சந்தேகங்களை நிவர்த்திசெய்து கொள்ளலாம்.
சில பல்கலைகள், பலவிதமான மாணவர் வழிகாட்டு சேவை
மையங்களை நடத்துகின்றன. Personal Contact Programmes எனப்படும் PCP
வகுப்புகள், பல்கலை வளாகத்தில் நடத்தப்படும். அத்தகைய வகுப்புகளில்
தங்களின் தேவை மற்றும் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து, மாணவர்கள்
கலந்துகொள்ளலாம்.
அதேசமயம், பல்கலை வளாகத்தில் நடைபெறும் PCP
வகுப்புகளுக்கு வர முடியாதவர்களுக்கு, சில பல்கலைகள், Regular Online
Interactive Session என்ற ஆசிரியர் - மாணவர் நேரடி கலந்துரையாடல் வசதியை
ஏற்படுத்தியுள்ளன. மாணவர்கள், தங்களின் சந்தேகங்களை குறிப்பிட்ட பல்கலை
இணையதளத்தில் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால், அந்த பதில்கள் ஒரு குறிப்பிட்ட
காலம் வரைதான் அதில் இருக்கும்.
சில பல்கலைகள், படிப்பு தொடர்பான அனைத்து
சந்தேகங்களையும் தீர்ப்பதற்கான ஸ்டடி சென்டர் மற்றும் மெக்கானிசம் பற்றிய
அனைத்து தகவல்களையும் தெளிவாக வழங்கும். நாம் மேற்கொள்ளும் படிப்பிற்கான
PCP வகுப்புகள் தொடர்பான தகவல்கள், குறிப்பிட்ட காலகிரமத்தில், பல்கலை
இணையதளத்திலோ அல்லது தபால் மூலமாகவோ மாணவர்களுக்கு தெரியபடுத்தப்படும்.
அந்த வகுப்புகள் நடைபெறும் காலங்களில்,
மாணவர்கள் தவறாமல் கலந்துகொண்டால், தங்களின் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட
பேராசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். இந்த PCP வகுப்புகளைப் பற்றிய
திட்டமிடல், பல்கலைக்கு பல்கலை வேறுபடலாம்.
உதாரணமாக, சில பல்கலைகள், இந்த வகுப்புகளை வார
இறுதி நாட்களில் நடத்தலாம் மற்றும் சில பல்கலைகள், ஆண்டிற்கு ஒருமுறை
மட்டுமே இதுபோன்ற வகுப்புகளை நடத்தலாம். குறிப்பிட்ட பாடத்திற்கான தேவை
மற்றும் Board of Studies -ன் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கூறிய
திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்த வகுப்புகளின் எண்ணிக்கை,
குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 21 நாட்கள் வரை இருக்கலாம். PCP
வகுப்புகளுக்கு செல்வதன் மூலம், நமக்கு, ஒரே பாடத்தை படிக்கும் வேறு
நண்பர்களின் அறிமுகம் கிடைக்கிறது மற்றும் இதன்மூலம் நமது நெட்வொர்க்
விரிவடைகிறது. எனவே, நமது சந்தேகங்களைப் போக்கவும், படிப்பின்பாலான
ஆர்வத்தை பெருக்கிக் கொள்ளவும் மேற்கூறிய நண்பர்கள் நமக்கு உதவிசெய்யும்
வாய்ப்புகள் அதிகம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...