ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில
பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும்
முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட
நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப்
பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை
ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும்
இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி
ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம்
செய்யப்பட்டு வந்தனர்.
இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள
வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்
செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து
மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496
பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10
ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம்
காலிப்பணியிடங்களும் உள்ளன.
கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும்
மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான
ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக
முக்கியத்துவம் பெறவில்லை.
என்ன வழக்கு? இடைநிலை ஆசிரியர்களை மாநிலப்
பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்
வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே
நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப்
பெற அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச
நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு
மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு
காலாவதியாகியுள்ளது.
எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண்
முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு
மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப்
பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை
ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளிலும், ஆறு
முதல் எட்டாம் வகுப்பு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர்
தகுதித் தேர்வு இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும்.
Nallathu nadanda sarithanga
ReplyDeleteVery gud
ReplyDeleteen friend weightage 65
ReplyDeletesgt posting vaaippu irukka sollunga friends
plz
நிச்சயம் இல்லை
DeleteYes wil have chance.
ReplyDeleteeppadithan ivangalukku udanadiya plan varuthune theriyalai ya......
ReplyDeleteDear friends paper1 my weightage is 76 can I get job this time pls inform me .......... Mbc caste
ReplyDeleteசிறிதளவு வாய்ப்பு இருக்கிறது
Delete