Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் மையம் அமைக்க உத்தரவு


            "மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மனநல நிபுணர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், கவுன்சிலிங் மையங்களை நிறுவ வேண்டும்" என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

             கல்லூரி கல்வி இயக்குனரகத்தைச் சேர்ந்த, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பள்ளி, கல்லூரி முதல்வர்கள், தாளாளர்கள், செயலர்கள் ஆகியோருக்கு, சமீபத்தில், ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளோம். ஒவ்வொரு கல்வி நிறுவனமும், தங்களது நிறுவனத்தில், மனநல நிபுணராக பணியாற்ற, ஒரு ஆசிரியரை பரிந்துரை செய்ய வேண்டும்; அவர், மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்குவதுடன், கவுன்சிலிங் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

                   இப்படி, தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, பெங்களூரு, "நிம்கன்ஸ்" மருத்துவமனை, மனநல ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் அளிப்பது குறித்து பயிற்சியை அளிக்கும். இதற்கான பயிற்சி மையங்கள், வரும் பிப்ரவரியில் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

              இதற்கிடையே, மாவட்ட வாரியாக, நடமாடும் மனநல ஆலோசனை மையத்தை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் 10 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட வாரியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு, கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மனநல ஆலோசனை மையம், தற்போது, இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

                    பள்ளி, கல்லூரிகளில் மூத்த ஆசிரியர் தலைமையில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாணவர்கள், கல்வி நிறுவன வளாகங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும்போது, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு உரிய நடவடிக்கையை எடுக்கும்.

               தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகமும், தன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. "மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அளிக்கவும், மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வகையில் உரிய கவுன்சிலிங்கை அளிக்கவும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆசிரியர் பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

                  மேலும், "மனநல பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர் விவரங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்" எனவும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை, பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.




1 Comments:

  1. I am BT Asst. I have completed M.Sc.,M.Ed.,M.Phil. Can i get third incentive. Pls reply.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive