தமிழகத்தில் 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6 மாதமாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப
ஆசிரியர்களும், பள்ளிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு படிக்கும்
மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு மூலம் உணவு
வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 6
மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் தீபாவளியை கூட சந்தோஷமாக கொண்டாட முடியாமல் குழந்தை தொழிலாளர்
பள்ளி ஆசிரியர்கள் அவதிப்பட்டுள்ளனர். இது குறித்து திட்ட
இயக்குனர்(பொறுப்பு) அறிவழகன் கூறியதாவது:
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், கடந்த 6 மாதமாக சம்பளம்
வரவில்லை. இதனால் ஆசிரியர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...