தபால் துறை சார்பில், அவ்வப்போது புதிய கருத்துகளுடன் ஸ்டாம்ப்கள் வடிவமைக்கப்படுவது
உண்டு. சில நேரங்களில், மாணவர்களிடையே இதற்கான போட்டிகள்
நடத்தப்பட்டு, அதில் சிறந்த வடிவமைப்பு தேர்வு செய்யப்படும்.
இந்தாண்டு, புதிய ஸ்டாம்ப்களை வடிவமைக்க, "உடனடி ஸ்டாம்ப் வடிவமைக்கும் போட்டி" நவ., 17ம் தேதி நடத்தப்படுகிறது.
இதில், தமிழக வட்டம் சார்பில், சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, கோவை மற்றும் சில நகரங்களில்
நடக்கிறது. இதில், நான்காம் வகுப்பு வரை ஒரு பிரிவும்,
ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவும்,
ஒன்பதாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரை ஒரு பிரிவும் என, மாணவர்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டில், ஸ்டாம்ப் வடிவமைப்பிற்கு, "என் தாத்தா பாட்டியுடன் ஒரு நாள்" என்ற மைய கருத்து
வழங்கப்பட்டு உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு
முதல் பரிசாக, 10 ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 6,000; மூன்றாம் பரிசாக,
4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
போட்டி நடக்கும் இடம் மற்றும் பதிவு
குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள தபால் நிலையங்களின்
முதுநிலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அணுகலாம். அல்லது, 044- 2852
0509 / 2858 7912 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு
கொள்ளலாம்.
இந்த தகவல்களை, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் சித்ரா தேவி தெரிவித்து உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...