மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்டப்பொதுக்குழுகூட்டம் தலைவர் பால்தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாரி மீனாள்(மதுரை), தனபால்(மேலூர்), தருமர்(உசிலம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் சட்டச்செயலாளர் சின்னப்பாண்டி, பிரச்சார செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசிக்க, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் வருமாறு:
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தனிஇருக்கைகள் வழங்கப்படும்
என்றும், மாவட்டக் கல்வி அலுவலர் நடத்தும் கூட்டங்களுக்கு மூத்த உதவி
ஆசிரியரை அனுப்புவோம் என்றும் தீர்மானம் நிறைவேறறிவிட்டு, மாவட்டக்கல்வி
அலுவலர் பதவிக்கு 50:25 என இருந்ததை, 40:35 என உயர்ததி மீண்டும் அதை
மாற்றக்கோரியுள்ளது முரண்பாடாக உள்ளது.
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை
பட்டதாரி ஆசிரியர் கழகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாணவர் நலத்திட்டங்களுக்கு தனி இயக்குநர்
நியமிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறையில் ஏற்பட்டுள்ள சிறந்த
மாற்றங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
உசிலம்பட்டி கல்வி மாவட்டச்செயலாளர் முத்தையா,
மதுரை கல்வி மாவட்டச் செயலாளர் தங்கநராயணன், மேலூர் கல்வி மாவட்டச்செயலாளர்
பாண்டியராஜன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா மற்றும் தலைமை ஆசிரியர்கள்
திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்டச்செயலாளர் பாஸ்கரன் வரவேற்றுப்
பேசினார். மாவட்டப் பொருளாளர் மீனாச்சி நன்றி கூறினார்.
பள்ளிகளில் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தனிஇருக்கைகள் வழங்கப்படும் என்பது சரியே. அவரவர்களுக்குரிய்து அது. நன்றாக சிந்தியுங்கள். தங்களை விட கீழ்நிலையிலுள்ள த.ஆ இருக்கையில் இய்க்குனர் கூட உட்கார கூடாது. இருக்கை பதவியை பொறுத்தது. தனி அறை ஒதுக்கி தனி இருக்கையில் நகரசபை தலைவர் அமரவில்லையா? என்னதான் அமைச்சராக இருந்தாலும் இய்க்குனர் சீட்டில் அமர்ந்தால் தான் வகிக்கும் பத்வி கீழிறங்கிவிடும். அதனால் தான் மேல்நிலை ,உயர்நிலை,தொடக்கநிலை,நடுநிலை,எ.இ.ஒ,டி,இ,ஒ,சி,இ,ஒ,ஜே,டி நாற்காலியில் அந்தந்த நிலைக்கு மேலுள்ள அதிகாரிகள் தனக்கு கீழ்நிலையிலுள்ள அதிகாரியின் சீட்டில்அமருவது அவ்வளவு மாண்புடையதல்லவே!
ReplyDeletegood comment. superindent cannot sit in junior asst seat, maintaing separte seat
ReplyDelete