உத்தரகண்ட்
அரசுத் தேர்வுகளில் 75 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண் பெறும்
மாணவர்களின் தாயாருக்கு கமலா நேரு விருது வழங்கப்படும் என்று அந்த மாநில
முதல்வர் விஜய் பகுகுணா தெரிவித்துள்ளார்.
பள்ளிக்
கல்வித்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவர்,
மாணவர்களின் கல்வி மற்றும் மனோபாவங்களை வளர்ப்பதில் அவர்களது தாயார்கள்
பெரும்பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் விருதுடன் சேர்த்து அவர்களுக்கு நிதி வெகுமதியும் அளிக்கப்படும் என்று பகுகுணா கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...