தமிழகத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்,
வெளிநாடுகளில் படித்து வரும் சூழ்நிலையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய
மாணவர்கள், அங்குள்ள பல்கலைக் கழகங்களில் கல்வி உதவித்தொகை பெறுவதில்
மோசடியில் ஈடுபட்டால், அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என
எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு
நாடுகளில் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் ஆராய்ச்சி,
மருத்துவம், பொறியியல் மேற்படிப்புகளை படித்து வருகின்றனர். இந்திய
மாணவர்களுக்கு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் பல வகையான கல்வி உதவித்தொகையை
வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
ஆனால், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய
மாணவர்களில் சிலர், கல்வி உதவித்தொகை மற்றும் கட்டண சலுகை பெற போலி
ஆவணங்களை அளித்துள்ளதாக இந்திய பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு மற்றும்
யு.ஜி.சி.,க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து யு.ஜி.சி., வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பயிலும், இந்திய
மாணவர்கள், போலி ஆவணங்கள் கொடுத்து கட்டண சலுகை அல்லது கல்வி உதவித்
தொகையை மோசடியாக பெற்றிருப்பதாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து
புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் மீது விசாரணை
மேற்கொள்ளப்படும்; அவரது பட்டம் ரத்து செய்யப்படும். வெளிநாட்டு
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு இடையூறு இருக்கும் பட்சத்தில், அது
குறித்து யு.ஜி.சி., அல்லது இந்திய பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்புக்கு
தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சென்னையை
சேர்ந்த 494 பேர் உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 7,000 மாணவர் படித்து
வருகின்றனர். அவர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...