தற்காலிக தொடர் அங்கீகாரம், ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம்
தமிழகத்தில் செயல்படுகின்ற சிறுபான்மை,
சிறுபான்மையற்ற அரசு உதவி பெறும் உயர்நிலை,
மேல்நிலை பள்ளிகளுக்கு உயர்நிலை பிரிவுகள் 6 முதல் 10 மற்றும் மேல்நிலை பிரிவுகள் 11,
12 வகுப்புகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம்,
ஆரம்ப அங்கீகாரம் கோருகின்ற கருத்துருக்களை
பரிசீலனை செய்து ஆணை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள பெற்றோர்
ஆசிரியர் கழக கூட்ட அரங்கில் விரைவில் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பள்ளிகளுக்கான தொடர்
அங்கீகாரம் தொடர்பான கருத்துருக்களை வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க
வேண்டும் என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை டிசம்பர்
10ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அங்கீகாரம்
வழங்குவதில் கடுமையான நிபந்தனைகள் தற்போது பின்பற்றப்படுகின்றன. இது தொடர்பாக
கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
பள்ளிக்குரிய இடம் யாருடைய பெயரில்
உள்ளது, வாடகை அல்லது குத்தகை எனில் 30 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணம் இணைக்கப்பட வேண்டும். இடம்
அறக்கட்டளைக்கு சொந்தமாக இருப்பினும் அது பள்ளிக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்க
வேண்டும். பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். பள்ளியை விட்டு
தனியே வெளியில் இருந்தால் மாணவர்கள் எவ்வாறு மைதானத்திற்கு அழைத்து செல்லப்படுவர்
என்ற விபரம் தெரிவிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் அங்கீகாரத்தின்
அடிப்படையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா, அதில் மாற்றம் ஏதும் இல்லை என்று முதன்மை கல்வி அலுவலர் சான்று
வழங்கி இருக்க வேண்டும். வருவாய் துறையின் கட்டிட உரிமை சான்று, மாவட்ட கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரின் உறுதிதன்மை சான்று
அவசியம்.
பள்ளியில் இனி வரும் காலங்களில் கூரை,
ஓடுவேய்ந்த கட்டிடங்கள் கட்டப்படமாட்டாது என
பள்ளி செயலாளர் அல்லது தாளாளர் உறுதிமொழி அளிக்க வேண்டும். மேலும் இயற்கை
சீற்றங்களால் மாணவர்களின் உயிருக்கு பாதிப்பு தரக்கூடி அம்சங்கள் பள்ளியில் இல்லை,
இடிந்த சுவர்கள், மூடப்படாத கிணறுகள், திறந்த வெளியில் மின்சார இணைப்புகள்,
விஷப்பூச்சிகள் போன்றவை பள்ளி வளாகத்தில் இல்லை
என்பதை உறுதி செய்து சான்று வழங்க வேண்டும்.
ஆரம்ப அங்கீகாரம் பெற வேண்டும் எனில் 5 கி.மீ சுற்றளவில் உள்ள பள்ளிகளிடம் தடையின்மை சான்று வழங்க வேண்டும் என்பது உட்பட 38 வகையான அம்சங்களை நிறைவு செய்து அதற்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...