தர்மபுரி மாவட்டத்தில் அட்மா எனப்படும் வேளாண்
தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் தற்காலிக ஒப்பந்த அடிப்டையில் பணி தேர்வு
முகமை மூலம் யூனியன் அளவில் காலியாக உள்ள நான்கு தொழில்நுட்ப மேலாளர்
மற்றும் நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என, எட்டு காலி பணியிடங்களுக்கு
தகுதிவாய்ந்த பணியாளர்களை நிரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
யூனியன் தொழில்நுட்ப மேலாளர் பணியிடத்திற்கு
வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை
பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் திறன் பெற்ற மற்றும் பட்டயபடிப்பு
முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் அரசால் வழங்கப்படும் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, அனுபவம் வாய்ந்த முறையாக பதிவுத்துறையின்
மூலம் பதிவு செய்த பணி நியமன முகமைகள், தங்களது முகமை அடிப்படையின்
விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் (அட்மா ) மேலாண்மை இணை
இயக்குனர், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, கலெக்டர் அலுவலக வளாகம்
என்ற முகவரிக்கு வரும் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04342-232225, 234099 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...