சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர்
நலனுக்காக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் புதிய அரசு தொழில்பயிற்சி
நிலையங்களை, முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி
காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த 9 தொழில் பயிற்சி மையங்களில், 4 தொழில்
பயிற்சி மையங்கள் பழங்குடி இனத்தினருக்கானவை. தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளில், ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காக ஏற்கனவே 62 அரசு
தொழில்பயிற்சி நிலையங்கள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன.
பல்வேறு காரணங்களால் உயர்கல்வியை தொடர
இயலாதவர்கள், தொழில் பயிற்சிபெற்று, அதன்மூலம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்திக் கொள்ளவும், மாநிலத்தில் திறன்மிகு தொழிலாளர்களின் தேவையினை ஈடு
செய்யவும் இத்தகைய அரசு தொழில் பயிற்சி மையங்கள் தேவை என்று அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்பயிற்சி மையங்களின் விபரங்கள்
திருவையாறு - தஞ்சை மாவட்டம்
போடி - தேனி மாவட்டம்
அருப்புக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்
ராதாபுரம் - திருநெல்வேலி மாவட்டம்
வேப்பலோடை - தூத்துக்குடி மாவட்டம்
பழங்குடியினருக்கான மையங்கள்
ஜமுனாமரத்தூர் - திருவண்ணாமலை மாவட்டம்
ஆனைக்கட்டி - கோயம்புத்தூர் மாவட்டம்
கொல்லிமலை - நாமக்கல் மாவட்டம்
கூடலூர் - நீலகிரி மாவட்டம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...