8–வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 9–வது முதல் பிளஸ்–2வரை உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்
படிப்பு உதவித்தொகை திட்டம் என்று அழைக்கப்படுகிறது. உதவித்தொகை வழங்குவதற்காக
தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.இந்த தேர்வை 7 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். இந்த
தேர்வுக்கான முடிவுகள் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tndge.in
என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த
தகவலை அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
appadaa oruvarudamaa pasanga paavam
ReplyDelete