அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும்
ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற
நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை
செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை
மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன்
ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ
டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில்
வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில்,ஆசிரியர் பணி நியமனத்திற்குஆசிரியர்
தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்
நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க
மறுத்துவிட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத
மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
தகுதி தேர்வு தொடர்பாக தேசியஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட
அறிக்கையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில்,சிறுபான்மை பள்ளிகள்,
தங்களது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் போது,அந்த
பணியிடத்திற்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தபட்சம் எவ்வளவு
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகிகளே முடிவு
செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.அதன்படி,அரசு உதவி பெறும்
பள்ளிகள்,சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி
தேர்வில் கண்டிப்பாக 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அரசு
நிர்பந்தம் செய்யக்கூடாது.
தகுதி தேர்வில் 60 சதவீதத்திற்கும்குறைவாக
மதிப்பெண் பெற்றவர்களை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள்,சிறுபான்மை
பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்க உரிய அனுமதி வழங்க பள்ளி கல்வித்துறை
முதன்மை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்
கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, :தேசிய
ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்,பள்ளி கல்வித்துறை முதன்மை செயலா
ளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப
நீதிபதிஉத்தரவிட்டார்.
Yean,
ReplyDeleteTET la 50 and 60 mark yeaduthavaga posting ku10 Lakhs Thareanu sonnaagalaa?
illa
90 mark yeaduthavaga tharugira panad kattopadi Aagalaiyaa?
gopi said anaithu pallikalilum TET pass pannavangalai govt neeyamikkanum oppathan propalam varathu
ReplyDeleteஅரசு பள்ளிகளை விட தரத்தில் சிறந்த விளங்குவதாக கூறும் தனியார் சிறுபான்மை பள்ளிகள் 60% விட 70% முதல் 80% வரை தேர்ச்சி பெற்றவர்கள் பணி அமர்துவதே நல்லது.வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வேண்டும் என கேட்கும் சிறுபான்மயினர் தேர்ச்சி பெற்றவர்களில் தங்கள் சமூகத்தினரை ஏன் தங்கள் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள இடங்களில் நிரப்ப கூடாது .மறை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை வேலை வாய்ப்பு அலுவலத்தில் பல ஆண்டுகளாக பதிவு செய்து காத்துஇருப்பவர்களை மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு கொடுத்தது இல்லை .அனால் அடுத்த மாவட்டத்தை சேர்த்தவர்களை நிர்வாகத்தினருக்கு உறவினரை கொண்டு காலி இடம் நிரப்பப்படும்.இதுவரை சுமார் 15 ஆண்டுகள் அரசு உதவி பெரும் சிறுபான்மை நிறுவனங்களில் பணி புரிந்து அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவும் இருந்து அரசு பணிக்கு சீனி யாரிட்டி முறைப்படி தேர்ந்தெடுக்கும் பொது இவர்கள் சென்று விடுவார்கள் .நிர்வாக உறவினர் அங்கு மீண்டும் அதே இடத்தில பணியமர்த்த படுவார். இது தான் இதுவரை நடந்து வந்த நடைமுறை .இடம் காலியாக உள்ள நிறுவனங்கள் அந்தந்த மாவட்டத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெரும் சிறுபான்மை ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதே நல்லது . இதில் பணம் விளையாடாது .தகுதி உள்ளவனுக்கு வேலை கிடைக்கும். உங்களுக்கு மதிப்பெண் சலுகை வழங்கினால் SC/ST/OBC/DH ஆகியோருக்கு சலுகை வழங்க வேண்டி வரும் . சிறப்பு சலுகைகளை சரியாக பயன்படுத்தினால் நல்லது .
ReplyDeleteBeing a christian, i welcome your comments. The persons in high level management are not considering the poor christians. The poor christians cannot even meet the concerned persons. Only powerful persons only can get appointment of teacher post for their family members and relatives. The real poor and eligible christians must be given job in the diocese they belong. Otherswise there is no meaning in giving special concessions by the govt. Every indian should be considered equal.
ReplyDeleteBeing a christian, i welcome your comments. The persons in high level management are not considering the poor christians. The poor christians cannot even meet the concerned persons. Only powerful persons only can get appointment of teacher post for their family members and relatives. The real poor and eligible christians must be given job in the diocese they belong. Otherswise there is no meaning in giving special concessions by the govt. Every indian should be considered equal.
ReplyDelete