தமிழக சட்டப்பேரவைக் கூட்டம்
நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவையின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
திடீரென அவசரமாகசட்டப்பேரவை கூடுவதற்கான
காரணம் ஏதும் சட்டப்பேரவை செயலாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தமிழக
அளவிலும், தேசிய அளவிலுமான முக்கியமான பிரச்சனை குறித்து கூட்டத்தில்
விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த்
மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக
சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய
சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த்
மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
இத்தகைய நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...