அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு
கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
அப்போது
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணி மூப்பு பெற்ற பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணி
மாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் கடந்த ஜூன் மாதம் சென்னை மற்றும்
அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.
இதற்காக முன்பே பதவி உயர்வுக்காக, பட்டதாரி
ஆசிரியர்களில் பாட வாரியாக பணி மூப்பு பெற்றவர்கள் பட்டியல்
தயாரிக்கப்பட்டது. அதில் தமிழ் மற்றும் தெலுங்கு பாடங்களில் பட்டம்
பெற்றிருந்த பணி மூப்பு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களில் யார் பெயர் முதலில்
இடம் பெறுவது என்பதில் சர்ச்சை எழுந்தது. தமிழாசிரியர்கள் தங்கள் பெயர்தான்
பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டும் என்றனர். அதற்கு தெலுங்கு மொழி
ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த பிரச்னையை அடுத்து இரு தரப்பினரும்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பதவி உயர்வு கவுன்சலிங் நடத்த
நீதிமன்றம் தடை விபத்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் பள்ளிக் கல்வித்
துறையின் சார்பில் அதிகாரிகள் ஆஜராகி, பிரச்னை உள்ள இடங்களை நிறுத்தி
வைத்துவிட்டு நடைமுறைப்படுத்த அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்து தீர்வு
கண்டிருக்கலாம். ஆனால் பள்ளி கல்வித்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை
என்று கூறப்படுகிறது.
அதனால் 453 உயர்நிலைப் பள்ளிகளில் இன்னும்
தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த கல்வி ஆண்டுக்கான பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதற்காக அரசு
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் குறித்த விவரப் பட்டியல் தயார்
செய்யும் பணி நடக்கிறது. மேற்கண்ட 453 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்
இல்லாததால் மாணவர் பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,
பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மாணவர்களை தயார் படுத்தி
கண்காணிக்கவும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...