சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 1ம்
தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பொது
தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் இருந்து நடைபெறலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மாணவர்கள் உட்பட அனைத்து வகுப்பிற்கும் அடுத்த மாதம் முதல் வாரத்தில்
இருந்து அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இதையடுத்து, பொது தேர்வை
நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்வுதுறை தீவிரமாக செய்து வருகின்றன.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்வை 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை 8
லட்சம் பேரும் எழுதினர். இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை 11.50
லட்சமாகவும், பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை 8.50 லட்சமாகவும் உயரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சரியான புள்ளி விவரம் டிசம்பர் 15ம்
தேதிக்குள் தெரிந்துவிடும்.
மாவட்ட வாரியாக பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களை
பெறுவதற்காக, 11 வகையான தகவல்கள் அடங்கிய படிவம் பள்ளிகளுக்கு ஏற்கனவே
வினியாகம் செய்யப்பட்டன. இதில் கேட்கப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்து மாணவ,
மாணவியர், ஆசிரியர்களிடம் ஒப்படைத்து விட்டனர்.
இதைத்தொடர்ந்து, இந்த விவரங்கள் அனைத்தும் தேர்வுதுறை இணையதளத்தில்,
பதிவேற்றம் செய்யும் பணி ஓரிரு நாளில் துவங்கும் என துறை வட்டாரங்கள்
தெரிவித்தன. பொது தேர்வுகள், மார்ச் 3ம் தேதியில் (திங்கள் கிழமை) இருந்து
துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் தனித்தனியே
நடைபெறும். வரும் ஆண்டில் இரு தேர்வுகளையும் ஒன்றாக நடத்துவது குறித்து
தேர்வுதுறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மார்ச் 3ம் வாரத்திற்குள், இரு
தேர்வுகளையும் நடத்தி முடிக்க தேர்வு துறை திட்டமிட்டுள்ளதாக துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...