நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.windows xp சேவையினை நிறுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு....
நாட்டில் உள்ள, 34 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள், இன்னும், 150தினங்களில் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின், மைக்ரோசாப்ட்கம்ப்யூட்டர் நிறுவனத்தின்அலுவலக பயன்பாட்டு,
மென்பொருளான, 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, நம் நாட்டின், 34 ஆயிரம் வங்கிகளும் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த ஆண்டு,
ஏப்ரல், 8ம் தேதி முதல், 'விண்டோஸ் எக்ஸ்பி'யை, மைக்ரோசாப்ட் கைவிட உள்ளது. அதற்குப்
பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற மென்பொருளை அறிமுகப்படுத்துகிறது.நம் நாட்டில், 40 - 70 சதவீத வங்கிப் பணிகள், விண்டோஸ்
எக்ஸ்பி மென்பொருள் மூலம் தான் நடக்கிறது.
இந்த மென்பொருள் நிறுத்தப்பட்டால்,
வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக
கூறப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்இந்த முடிவால், இந்திய வங்கிகளுக்கு, 3,300 கோடி ரூபாய்
இழப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது.விண்டோஸ் எக்ஸ்பிக்குப்
பதிலாக, 'விண்டோஸ் 8.1' என்ற, புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை
பயன்படுத்தும் படி, அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்த
ஆப்ரேட்டிங் சிஸ்டம், வைரஸ் தாக்குதலில் இருந்து, எக்ஸ்பியை விட, ஆறு மடங்கு அதிகமாக தாக்கு பிடிக்கும்
என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
central govt kitta panam illapa rumba custapaduranga help pannunga
ReplyDelete