தமிழக அரசுத்துறைகளில் உள்ள 1064
பணியிடங்களுக்கான குரூப் 2 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் மூலம் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
துணை வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்க இணைப்
பதிவாளர் மற்றும் பல்வேறு துறைகளில் உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்
உட்பட பல்வேறு பணிகளுக்கான இடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) குரூப் 2 தேர்வு
நடத்தப்படும் விதம், அதில் வினாக்கள் கேட்கப்படும விதம், மதிப்பெண்
விகிதங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தற்போது நடத்தப்படும் குரூப் 2 தேர்வு
முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை
உள்ளடக்கியது. இதில் முதல் நிலைத் தேர்வுதான் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி
நடத்தப்பட உள்ளது. இதில் 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையிலான 200
வினாக்கள் இடம் பெறும்.
பொதுவான பாடங்களில் இருந்து 75 வினாக்கள்,
மனத்திறன் மற்றும் மனப்பான்மையை அளவிடும் விதத்தில் 25 வினாக்கள், பொதுத்
தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதனையடுத்த
பிரதான தேர்வில் பொதுப் பாடங்கள் மற்றும் விவரித்து எழுதும் விதமான
வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இத்தேர்வு இரண்டு பிரிவுகளை
உள்ளடக்கியது.
இரண்டு மணி நேர அளவிலான முதல் பகுதியில் 250
மதிப்பெண்களுக்கான 125 கொள்குறி வகையிலான வினாக்கள் கேட்கப்படும். ஒரு மணி
நேர அளவிலான இரண்டாம் பகுதியில் 50 மதிப்பெண்களுக்கு விரிவான விடை எழுதும்
வகையிலான வினாக்கள் கேட்கப்படும். இதனையடுத்து தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...