Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்


        ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன. முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

          அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27 ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

              தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளுக்கும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையிலும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

                   எனவே, தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் தற்போது 15 ஆயிரம் பேர் மட்டும்தான் ஆசிரியர் பணிக்கு எடுத்து கொள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி 2 வாரத்தில் தொடங்கும் என்று தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                  சான்றிதழ் சரிபார்க்கும் பணி சென்னையில் நடைபெறும் என்று தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் தொடக்க கல்வி துறைக்கு அனுப்பப்படும். அத்துறை காலியாக உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கான பணி ஆணையை வழங்குவார்கள்.




9 Comments:

  1. anybody participated in cv from 6/9/13 to 14/9/13 for tet last year who were absent and certificate not produced and GO for equivalent subjects get after exam. conduct 8148622030

    ReplyDelete
  2. anybody participated in cv from 6/9/13 to 14/9/13 for tet last year who were absent and certificate not produced and GO for equivalent subjects get after exam. conduct 8148622030

    ReplyDelete
  3. முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (நவ 6) நிறைவடைந்தது.
    முதுகலை ஆசிரியர் கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள இயலாமல் போனவர்களுக்கும் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்றும் இன்றும் (நவ 5,6) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
    இன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ள இயலாமல் போன சுமார் 30 பேர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒரிருவரைத்தவிர மற்றவர்கள் இன்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete
  4. second grade ku mattum yethuku seniority , avangalaium mark vatchu yedukalamae????????????

    ReplyDelete
  5. சார் வணக்கம், உங்கள் இணையதளத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது அதற்கு என் வாழ்த்துகள்.
    சார், இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்பிற்கு கொண்டு செல்ல வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன என்று தயவு செய்து கூறவும் .நன்றி

    ReplyDelete
  6. sir please tell number of selected candidates in subjectwise

    ReplyDelete
  7. sir TET Exam la differently abled teacher's ethani per pass?

    ReplyDelete
  8. TETPAPER 2 WEIGTAGE SYSTEM 96 MARKS PAPER2 ILLA VANIKI IRUKIAN +2 ILLA GOVT SCHOOLA PADICHA ENAKU ENNA WEIGTAGE MARK ONLY 4 MARKS BUT MATURICULATION SCHOOLA PADICHA EN FRIENDIKU WEIGTAGE 6 MARKS ?

    ReplyDelete
  9. Sir, I want to know about the subject wise vacancy for BT Asst. - S. Sakthikumar, Mannargudi

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive