ரூசா திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி மற்றும்
புத்தாக்க நடவடிக்கைகளை மேம்படுத்த, 12 மாநிலங்களுக்கு தலா 120 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில், Base Research,
Key Technology (R&D), High End (R&D) உள்ளிட்ட ஆராய்ச்சி
நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூசாவின் திட்ட
அனுமதி வாரியத்தின் முடிவின்படி, மேற்கண்ட நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
அசாம், பீகார், கர்நாடகா, கேரளா, மராட்டியம்,
ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்பட, 4 யூனியன்
பிரதேசங்கள் ஆகியவை, இந்த நிதியுதவியைப் பெறுகின்றன.
அடுத்த 8 ஆண்டுகளில், நாட்டின் உயர்கல்வித்
துறைக்கென்று ரூ.98,983 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. இந்த நிதியுதவியின் மூலமாக, அறிவியல் பூங்காக்கள்
நிறுவுதல், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் வசதிகள்
ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...