நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள் ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக
மாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்
பெற்றுள்ளன.
அதாவது, ஒருமை வகை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிக் கொள்ளலாம். பிற பல்கலைக் கழகங்களை சார்ந்து
இருக்க வேண்டாம். அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம்
பெற்றுள்ளன.
கோவை - கொங்கு நாடு கல்லூரி, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
ஈரோடு - வெள்ளாளர் மகளிர் கல்லூரி
திருச்சி - செயின்ட் ஜோசப், திருச்சி ஜமால் முகமது, திருச்சி தேசிய கல்லூரி
மயிலாடு துறை - ஏ.வி.சி., கல்லூரி
சிவகாசி - ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரி
மதுரை - பாத்திமா கல்லூரி
பாளையங்கோட்டை - செயின்ட் சேவியர் கல்லூரி
இந்த கல்லூரிகளுக்கு, மூன்றாண்டு இடைவெளியில் அடிப்படை கட்டமைப்பு நிதியாக, 55 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...