நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக பலரும் உழைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்வுக்கான தற்காலிக கீ ஆன்சர்களை டிஆர்பி வெளியிட்டது. இந்த கீ ஆன்சர்கள் அடிப்படையில் டெட் மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் கணக்கிட்டு தேர்வர்கள் பலரும் தங்கள் பணி வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
தாள் 1 ஐப் பொறுத்தவரை 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற அனைவருக்கும்
வேலைவாய்ப்பக முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பு கிடைக்கப்பெறும் என்பதால் அவர்களுக்கு
பெரிதாக எதுவும் பிரச்சினை இல்லை.
ஆனால் தாள் 2 ஐப் பொறுத்தவரை 12th Std, UG, B.Ed
என்று வெயிட்டேஜ் கணக்கிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே 12ஆம் வகுப்பில்
அதிக படியான மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதனால் சராசரியான மாணவர்கள் கூட 1000 மதிப்பெண்களுக்கு
மேல் எளிதாக பெற முடிகிறது. ஆனால் பத்து வருடங்களுக்கு முந்தைய நிலை வேறு. 12 ஆம் வகுப்பில்
அதிக மதிப்பெண்களை பெறுவது அவ்வளவு எளிது அல்ல.
மேலும் 12 ஆம் வகுப்பில் கணக்கு, அறிவியல் என முதல் குரூப் எடுத்தவர்களின்
மதிப்பெண்ணை காட்டிலும் வரலாறு, வொக்கேஷனல் போன்ற குரூப் எடுத்தவர்கள், மற்றும் செய்முறைத்
தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் குரூப்பில் படித்தவர்கள் வெயிட்டேஜ்
அதிகம் பெறுவார்கள் என்பது யதார்த்தம்.
இளங்கலை கல்வியை பொறுத்தவரை நேரடியாக பயின்றவர்களுக்கு வழங்கப்படும்
மதிப்பெண் அதிகம். அதே சமயம் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிறுவனத்தில் பணி செய்து
கொண்டே அஞ்சல் வழி கல்வி மூலம் கற்பவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. இதனாலும்
பாதிப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக டெட் தேர்வில் 104 மதிப்பெண் எடுப்பவருக்கும் ஒரே
வெயிட்டேஜ் 90 மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் ஒரே வெயிட்டேஜ் என்று இருப்பதை மாற்றி
டிஇடி தேர்வில் பெற்ற ஒவ்வொரு மதிபெண்ணுக்கும்
முக்கியத்துவம் அளிக்க பட வேண்டும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஒவ்வொரு
மதிபெண்ணுக்கும் 0.5 MARK என்ற வீதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாமே!. (ஏனெனில்
இந்த 90 முதல் 104 க்குள் தான் பெரும்பாலானோர் மதிப்பெண் பெறுகின்றனர்).
இயன்றால் முதுகலை ஆசிரியத் தேர்விற்கு வழங்கப்படுவது போன்று
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள வருடங்களுக்கு ஏற்ப தனியே வெயிட்டேஜ் மதிப்பெண்
மற்றும், பணி அனுபவம் உள்ளவர்களுக்கு தனியே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம்.
இவ்வாறு பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் தற்போது இல்லாவிட்டாலும்
அடுத்த டெட் தேர்விலாவது யாருக்கும் பாதிப்பு ஏற்படா வண்ணம் இந்த முரண்களை களைந்து
அரசாணை வெளியிட வேண்டும் என்பதே தேர்வர் பலரின் விருப்பமாகும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
I sent this article yester day. So thanks
ReplyDeleteஅரசு மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் தேவை என்கிறது. நீங்கள் திரும்பவும் அரைகுறையனவ்ர்களுகு வேலை கிடைபதற்கான வழி சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கு முதலில் புரயுதானே எனக்கு தெரியவில்லை .மேலும் முதல் குருப் படித்தவன் அவனுடைய குருப் படிதவனுடந்தான் போட்டிஇடப்போகிறானே தவிர அடுத்த குருப் படிதவனுடன் போட்டிஇடப்போவதில்லை இதுவே தெரியாமல் தயவு செய்து உங்களுக்கு வேலை கிடைக்க எந்த முறையில் பின்பற்றினால் பறவையில்லையே என்பதை எல்லாம் கட்டுரையாக போடாதீர்கள் .தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் அறைகுறை ஆசிரியர்களால் அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை வீணடிக்க நினைக்காதீர்கள் . மேலும் உங்கள் குடும்பசுமையை காரணம் காட்டி அடுத்து வரக்கூடிய தலைமுறையும் பாலாக்க நினைக்காதீர்கள் .சிறந்த ஆசிரியர்களே மிகசிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் உங்கள்கட்டுரையில் கூறியது போல சராசரி மாணவன் கூட 1000 மதிப்பெண் எடுக்கிறார்கள் என்று அது தவறு இன்று நீங்கள் எப்படி TET தேர்வுக்கு படித்தீர்களோ அதைவிட அதிகமாக இன்றைய மாணவர்கள் சிறப்பாக படிகிறார்கள்.அதேபோல இன்றைய மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு விளக்கமளிக்க தெரிந்த அளவுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேவை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நன்றி
ReplyDeleteIt reflected majority of candidates views who had completed schooling 10 years ago
ReplyDeleteDear publishers,
ReplyDeleteWhere you people have gone in the last year?
TRB announced a selection procedure covering all the aspects after careful consideration of all experts.
Any mark is precious.Don't blabber that only TET exam hard work is important.
I think this selection procedure is acceptable.
Don't give importance to this type of requests, Mr. Owner/Publisher.
மிகவும் சரியான கோரிக்கை ... என்னுடைய மதிப்பெண் 103.. வெயிடேஜில் எனக்கும் 42 தான் ,..90 மதிப்பெண் பெற்றவருக்கும் அதே 42 தான். . . அப்படியானால் நான் அதிகபட்சமாக பெற்ற 13 மதிப்பெண்ணுக்கு மதிப்பில்லையா ??? இது நியாயமே இல்லையே... இதற்கு டி ஆர் பி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
ReplyDeleteNOTHING TO SAY, WE PEOPLE ABOVE +35 ARE HIGHLY DISAPPOINTED. ALL THE SOLUTIONS ARE LIES ONLY IN THE HANDS OF OUR GOVT., PLEASE I REQUEST THE GOVT., TO UNDERSTAND OUR FEELINGS ALSO. IT WEIGHTAGE SYSTEM IS FOLLOWED, DEFINITELY WE WILL BE AFFECTED. SO PLEASE CONSIDER ONLY THE T.E.T MARKS ALONE, THE MARKS WHICH WE SCORED NOW, IS ONLY AFTER SO MANY SACRIFICES, EVEN , MOTHER LIKE ME WORKED HARD WITHOUT TAKE CARE OF MY CHILD. IF WE ARE REJECED THIS TIME , ALL THE SACRIFICES WENT WASTE. SO PLEASE TREAT THE PEOPLE ABOVE 35 ALSO A HUMAN BEING, NO WORDS TO EXPLAIN OUR STRESS.
ReplyDeletedefinetlly god will help those who got above 90, by changing the weightege. sincerely pray to God.He will hear your request. Because your feelings are correct.
ReplyDeleteIs there any changes in weitage system ? When will we call for CV..?
ReplyDeleteB.lit post kadikuma
ReplyDeleteB.lit post kadikuma
ReplyDeleteplease intimate how to calculate the percentage marks for U.G. degree (i.e. calculate the three years marks and take percentage or only calculate the marks of final year and take percentage)?
ReplyDeletefriends g/mrng. please intimate how to calculate the percentage marks for U.G. degree that means calculate the three year marks and get percentage or calculate the final year marks and get percentage which is correct
ReplyDeleteThanks padasalai
ReplyDelete