ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில்,
முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை
பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், 23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14 மையங்களில்,
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில்,
வழக்கத்திற்கு மாறாக, புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது. அதன்படி,
ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ., தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது.
தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் ஆய்வு
செய்து முடித்ததும், அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி, டி.ஆர்.பி.,
இணையதளத்தில், அப்லோட் செய்தனர். மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு, தகுதியானவர் என்றும்,
தேர்வு செய்யப்பட்ட தேர்வரின் ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும்
கையெழுத்திட்டு, அதன் நகலை, தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி.,
நடவடிக்கை எடுத்தது.
இதன்மூலம், டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒருமுறை தனியாக,
சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல்
தயாரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்படும். அதே நேரத்தில், தகுதியான
ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட நான்கு
அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி
அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வு செய்யப்படும்
ஆசிரியரில், யாராவது பின்னாளில், தகுதியற்றவர்களாக கண்டுபிடிக்கப்பட்டால்,
சான்றிதழை சரிபார்த்த, நான்கு அலுவலர்கள் மீதும், துறை ரீதியாக, கடும்
நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.பி., வழிவகை செய்துள்ளது. இது, எங்களுக்கு,
தேவையற்ற, டென்ஷனை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.
What about TET sir ? .......... Nothing !
ReplyDeleteFist,trb must obey court order.last year lot of equivalent subjects candidates went to court to get post and court ordered to give post,but still now trb did't obey it .any this type of candidates,have appointment especially applied maths? conduct 8148622030
ReplyDeletewhen govt will announce tet result?
ReplyDeleteadditional provisional list for certificate verification for PG TRB is now available in trb site!
ReplyDeleteADDITIONAL PG TRB LIST KULARUPADI
ReplyDeletePGTRB list ZOOLOGY MBC QUTOA vittu vitu list prepare panni vitu irukanga nanga ena ceithom nangalum than fees kati day night padichi exam eluthinom, Alachiyama list prepare panni irukingala?
அ
ReplyDeleteTET தேர்வுக்கான முக்கிய வினா...........
ReplyDeleteபதில் தெரிந்தவர்கள் கூறலாம் .....
பதில் தெரியாதவர்கள் சற்று யோசிங்கள் பார்க்கலாம் ......
1. TRB அநேகமான தேர்வு முடிவுகளை இரவில் வெளியிடுகிறதே ....அவ்வாறு இரவில் வெளியிட அது என்ன ஷகிலா படமா ?தேர்வு முடிவு தானே ?
2. அவ்வாறு பகலில் தேர்வு முடிவுகளை வெளியிட்டால் அனைவரும் பார்க்க முடியாது என்றால் அதற்கான வசதியை இன்னும் செய்யாதது ஏன்? TET வசூலித்த பணம் என்ன ஆச்சு ?
3.மேலும் TET தேர்வு முடிவுகளை விடுமுறை நாட்களுக்கு முன்பாக (or ) வெள்ளி கிழமை இரவு வெளியிடபடுவது ஏன் ? ( TET தேர்வு முடிவு என்ன அரசியல் வாதிகளின் கைது போன்றதா )
4.ஆசிரியர் தகுதி தேர்வு தான் நல்ல மாணவர்களை உருவாக்கும் என்று சென்ற முறை கூவிய செய்தி தாள் மற்றும் மீடியா தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியிடாமல் இருப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன் ?
5.ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யும் ஆசிரியர் தான் தகுதியானவர்கள் என்று கூவிய வாய்கள் ..........தகுதி இல்லாத ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் போது பேசாமல் இருப்பது ஏன் ?
6.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கடந்த ஒரு வருடமாக வேலையை இழந்து கஷ்டபடுபவர்களுக்கு தற்போது கிடைத்த வேலை என்னவென்று தெரியுமா ? ( 100 நாட்கள் வேலை .....கட்ட வேலை ........etc ........)
7.நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது கிடைத்த பதவி என்னவென்று தெரியுமா ? ( vo ......and SI )
8.ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடாமல் வேறு முடிவு( RUMOR NEWS )எடுத்தல் ஆசிரியர்களுக்கு தகுதி வேண்டும் என்று பேசியவர்கள் ..........ஆசிரியர்கள் அனைவரும் தகுதியானவர்கள் தான் அதை தேர்வு செய்ய முடியாதவர்கள் தான் தகுதி இல்லாதவர்கள் என்று ஒப்புகொள்வர்களா ?
9. தமிழகம் வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்களே ..... யாராவது எங்கு செல்கிறது என்று பின் தொடர்ந்து பார்த்தது உண்டா ?
10. நடந்து முடிந்த TET தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தற்போது வேலை இன்றி கஷ்டபட்டு கொண்டு உள்ளனர் என்பது மட்டும் உண்மை ......
சரியென்றால் கூறுங்கள் .......நாளை என்னுடைய வாழ்கையில் நடை பெரும் கஷ்டம் ....... அனுபவித்த கஷ்டம் .....கூறுகிறேன் .....
இப்படி கஷ்டத்தை சொல்லிய பின்பாவது தேர்வு முடிவு வெளியிட்டு ,விரைவில் பணி வழங்கட்டும் ........
வாழ்க பாதி வளமுடன் ........மீதி ....பிறர் வாழ வழிசெய்வோம் ......
இப்படிக்கு
உங்களில் ஓருவன்
ராசி ......