2
ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள
பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22,23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
சான்றிதழ்.
சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு
வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள்
அனைவரும் அழைக்கப்படவில்லை. வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை
எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம்
உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில் தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்ற
உத்தரவுப்படி 123 பேர்கள் அடங்கிய கூடுதல் பட்டியல் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக மேலும் 5 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இன்று
(அக் 28) நீதியரசர் எஸ்.நாகமுத்து முன்னிலையில் 6 வழக்குகள் மீண்டும்
வருகின்றன இவை வெவ்வேறு கோரிக்கைகளுக்காக தொடுக்கப்பட்டுள்ளதால் 3
தொகுப்பாக பட்டியளிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று TRB சார்பில்
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார் பட்டியல் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. நீதிமன்ற அடுத்தக்கட்ட
நடவடிக்கைகள் இன்று மாலை தெரியவரும் .
what happened today at madurai high court?
ReplyDeletewait.....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete