பள்ளிக் கல்வித்துறைக்கு ஆறாவது அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தின் புதிய பள்ளிக் கல்வித்துறை
அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை அடிக்கடி
மாற்றியமைக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு
மட்டும் இதுவரை 5 அமைச்சர்கள் மாறிவிட்டனர்.
இந்த வகையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த
கே.சி.வீரமணி, பள்ளிக் கல்வித்துறைக்கு 6வது அமைச்சராக தற்போது
வந்துள்ளார். இதுதவிர, விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் தமிழ் பண்பாட்டுத்
துறை உள்ளிட்ட துறைகளையும் அவர் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறைக்கு புதிய அமைச்சராக விஜய பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே, இதுவரை,
சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவபதி, வைகை செல்வன், பழனியப்பன்
ஆகிய 5 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தற்போது ஆறாவது நபராக
கே.சி.வீரமணி வந்துள்ளார்.
அதேசமயம், உயர்கல்வித் துறையில் இதுவரை
அமைச்சர்கள் மாற்றப்படவில்லை. 2011ம் ஆண்டு அரசு பதவியேற்கும்போது
நியமிக்கப்பட்ட பழனியப்பன், இதுவரை அதே துறையை வகித்து வருவது
குறிப்பிடத்தக்கது.
Appada tet resut vanthuram?
ReplyDeletewhen tntet result
ReplyDeletefriday nit tet result expect pannalam frds
ReplyDeleteFridAY confirma tet rst?
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா !
ReplyDeletenot confirm rubesh.. but xpect pannalam...... saturday and sunday court leave .. so there is chance to publish on friday
ReplyDelete