Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை ஐகோர்ட்டு உத்தரவு

 
           தாவரவியல் முதுநிலை ஆசிரியர் தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

          சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

முதுநிலை ஆசிரியர் தேர்வு

                நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன்.

                   இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது தெரியவந்தது.

பணி வழங்க வேண்டும்

              இந்த தேர்வில், கேள்வி எண்கள் 31–க்கு சரியான விடைக்கு மதிப்பெண் வழங்காமலும், தவறான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டும் உள்ளது. நான் அளித்த சரியான விடைக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தால், ‘கட் ஆப்’ மதிப்பெண் 94 பெற்று, ஆசிரியர் பணிக்கு தகுதியானவராக இருந்து இருப்பேன்.

              இதுகுறித்து, 31–வது கேள்விக்கு சரியான விடைகளை ஆதாரங்களுடன் குறிப்பிட்டு, மனுவாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன்.

                 இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே சரியான விடை அளித்த எனக்கு மதிப்பெண் வழங்கவும், ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றுவிட்டதால், எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பாடப்புத்தக ஆதாரம்

                 இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.அன்பரசு ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

                             ஆசிரியர் தகுதி தேர்வில், தாவரவியல் பாடத்தில் 31–வது கேள்விக்கு சரியான விடையை மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இது சரியான விடைதான் என்பதை 11–ம் வகுப்பு தாவரவியல் பாடபுத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதையும் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.

                    இப்போது, மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு நிர்ணயம் செய்துள்ள ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை அவர் பெற்றுவிடுவார்.

நிரப்பக்கூடாது

                      எனவே, மனுதாரரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுக்க வேண்டும். 193 தாவரவியல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.




1 Comments:

  1. நைட்ரஜன் நிலைநிறுத்ததலின் மூலம் அம்மோனியா வாக்கும் நுண்ணுயிரின் பெயர்:

    (A) அசட்டோபாக்டர்
    (B) குளோசஸ்டிரிடியம்
    (C) நைட்ரோசோகாக்கஸ்
    (D) பேசில்லஸ் ராமோசஸ்

    BOTANY
    HIGHER SECONDARY - FIRST YEAR
    VOLUME - II
    ஆங்கில வழி
    பாட நிபுணர் குழு ஆதாரம்
    பக்கம் எண் 265


    Table 5.4. Major Nitrogen-fixing Biological Systems
    I. Free-Living (asymbiotic) microorganisms
    Bacteria
    Aerobic, Species of Azotobacter
    Aerobic,non-photosynthetic Species of Clostridium

    பாட நிபுணர் குழு நன்றாக தீர ஆராய்ந்து ()அசட்டோபாக்டர் மற்றும் ()குளோஸ்டிரிடியம் என்ற விடைகளை அளித்தனர்


    மனுதாரர்:

    பக்கம் எண் 261


    (i) Ammonification
    This involves conversion of organic nitrogen to ammonium ions by microbes
    present in the soil. The sources of organic nitrogen in the soil are animal excreta
    and dead and decaying plant and animal remains which are acted upon by
    ammonifying saprotrophic bacteria such as Bacillus ramosus,


    பேசில்லஸ் ராமோசஸ் ஒரு சாறுண்ணி பாக்டீரியா. அவை இறந்த உடல்களை சிதைத்து அதன் மூலம் அமோனியாக மாற்றுகிறது. இவை நைட்ரஜன் சுழற்சியின் ஒரு பகுதியாகும்.

    இறந்த உடல்களை சிதைத்து அமோனியாக மாற்றுவதை எப்படி நிலை நிறுத்துபவை என்று கூற முடியும்.
    அவை நைட்ரஜன் நிலைநிறுத்த முடியாதவை

    வளிமண்டல நைட்ரஜனை நேரடியாக கிரகித்து நிலை நிறுத்துகிறதா?

    நிலை நிறுத்தி நைட்ரஜனை அமோனியாக மாற்றுவதும்
    சிதைத்து அமோனியாக மாற்றுவதும் ஓன்றா?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive