Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுக்குள், ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என இயக்குநர் உத்தரவு


           மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

          அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.இயக்குனர் பிச்சை பேசியதாவது: அங்கீகாரம் இல்லாத, மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும். அங்கீகாரத்திற்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. 
 
          மாணவர்களுக்கு உடல், மன ரீதியாக தண்டனை அளிக்கக் கூடாது.தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு பிச்சை பேசினார்




2 Comments:

  1. மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    இது அரசு பள்ளியில் கருணை,கலப்பு மணம் புரிந்தவர்கள், மாற்று திரனாளிகள் அடிப்படையில் நியமித்தவருக்கும் பொருந்தும் தானே?

    ReplyDelete
  2. Yes it GO will applicable to all those appointed either in Govt or Aided or Matric
    They must qualified within the stipulated time given. Otherwise they should get Stay from the court

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive