சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு
கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தீவிர
ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன்
தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி அளவிலேயே, சிந்தித்து, விடையை எழுதும் வகையில், கேள்விகள்
அமைந்தால், மாணவர்களின் திறமை வெளிப்படும் என்றும், இந்த முறையினால், உயர்
கல்வியையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும், கல்வித்துறை
கருதுகிறது.
சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையில், தமிழக அரசு
அமைத்துள்ள நிபுணர் குழு, கேள்வித்தாள் அமைப்பை மாற்றி அமைக்கும் பணியில்,
மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாணியில், மாணவர்களின்
அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் வகையிலான கேள்விகளை அமைக்க, நிபுணர் குழு
திட்டமிட்டுள்ளது.
மேலும், விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில் ஏற்படும் பிரச்னைகளை களைந்து,
பாதுகாப்பான முறையில், தேர்வு மையங்களில் இருந்து, விடைத்தாள்களை எடுத்துச்
செல்வதற்கான வழிமுறைகள் குறித்தும், இந்த குழு, பரிந்துரைகளை அளிக்க
உள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இம்மாத
இறுதிக்குள், அறிக்கை தயாராகிவிடும் என, எதிர்பார்க்கிறோம். முதல்வர்
அனுமதி அளித்ததும், கேள்வித்தாள் அமைப்பு முறை, வெளியிடப்படும். புதிய
திட்டத்தின்படி தயாரிக்கப்படும் கேள்வித்தாள், 2015 16ம் கல்வி ஆண்டில்
அமலுக்கு வரும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...