தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில், பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 2013 ஜூலையில்,
ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்டவர்களை, முதுகலை
ஆசிரியர் பணியிடத்தில் நியமிப்பதற்கான, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, 14
மாவட்டங்களில், நேற்று துவங்கி இன்று முடிகிறது. இவர்கள்
நியமிக்கப்பட்டால், பதவி உயர்விற்காக, ஐந்து மாதமாக காத்திருக்கும், 3,000
பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை பட்டம் பெற்றவர்கள்) பாதிக்கப்படுவர் என்ற
நிலை ஏற்பட்டு உள்ளது. "எங்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், டி.ஆர்.பி.,
யில் தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர்
சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
துணைத் தலைவர் எட்வின் கூறுகையில், ""ஒரே நேரத்தில் 2 "டிகிரி' முடித்த
ஆசிரியர்கள், பதவி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனால், பதவி
உயர்வு பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புதிய
நியமனங்கள் மூலம், மேலும் பாதிப்பு ஏற்படும். தகுதியான ஆசிரியர்களுக்கு
பதவி உயர்வு அளித்தபின், டி.ஆர்.பி., யில் தேர்வானவர்களை நியமிக்க
வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...