முதல்வரின் பொது நிவாரண நிதி வாங்க, கலெக்டரை நாடும் பி.இ.,
எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், அலைக்கழிப்பால், நிதி பெறமுடியாமல் தவித்து
வருகின்றனர்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்குள் இருத்தல் அவசியம்.
விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பிளஸ் 2 மதிப்பெண்
சான்று, தாசில்தாரிடம் ஒப்பம் பெற்ற வருமான சான்று, குடும்ப உறுப்பினர்கள்
பெயர், வயது, கல்வி, வருமானம். கவுன்சிலிங் உத்தரவு நகல், பிறப்பிட
சான்றுகளுடன் மாவட்ட கலெக்டர்களிடம் வழங்க வேண்டும்.
கலெக்டர்கள் விசாரணை செய்து, ஒப்புதல் கடிதத்துடன், சிறப்பு
அதிகாரி,முதல்வரின் தனிப்பிரிவு, சென்னைக்கு அனுப்பவேண்டும். ஒரு சில
மாவட்டங்களில் பி.இ., எம்.பி.பி.எஸ்., மாணவர்கள்,கலெக்டரிடம் ஒப்படைத்தால்,
அவர்கள் விண்ணப்பங்களை வாங்க மறுப்பதோடு, அந்தந்த சி.இ.ஓ.,
அலுவலகங்களுக்கு அனுப்பி விடுகின்றனர்.
சி.இ.ஓ., அலுவலகத்தில், இந்த விண்ணப்பத்திற்கும், கல்வித்துறைக்கும்
சம்பந்தமில்லை எனக்கூறி, மாணவர்களை திருப்பி விடுகின்றனர். இந்த
குழப்பத்தால், முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக, விண்ணப்பிக்க முடியாமல்,
பி.இ., எம்.பி.பி.எஸ்., மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
அரசு, முதல்வரின் பொது நிவாரண நிதியை பெறுவதற்கான, நடைமுறை குறித்த
விபரங்களை அந்தந்த மருத்துவ, பொறியியல் கல்வி நிறுவனங்கள், கலெக்டர்களுக்கு
வழங்க வேண்டும் என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...