தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின்,
சமுதாயக் கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச
பஸ் பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம், 2002ல்,
முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் துவக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம்,
கல்வியைத் தொடர முடியாத இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு, கல்விக்கான மாற்று
வாய்ப்பை அளிப்பதுடன், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு உதவி செய்து, சமுதாய
மேம்பாட்டிற்கும், மனிதவள மேம்பாட்டிற்கும், துணைபுரியக் கூடிய, சமுதாயக்
கல்லூரிகளை நடத்தி வருகிறது.
இப்பல்கலையின் கீழ் செயல்படும் சமுதாய
கல்லூரிகளில், கற்பிக்கும் முறை, முற்றிலும் மாறுபட்டது. வெவ்வேறு
சூழ்நிலைகளினால், பாதியிலே படிப்பை நிறுத்தியவர்களுக்கு, மேலும் படிக்கக்
கூடிய வாய்ப்பை தரக்கூடிய கல்லூரிகளாக, இவை திகழ்கின்றன. நகர்ப்புற
சமுதாயக் கல்லூரி, கிராமப்புற சமுதாயக் கல்லூரி, சிறைச்சாலை சமுதாயக்
கல்லூரி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சமுதாயக் கல்லூரி என, ஆறு வகையான சமுதாயக்
கல்லூரிகள், செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலம், ஆடைகள் வடிவமைத்தல் பட்டயம்,
&'பிளம்பிங்&' தொழில்நுட்ப பட்டயம், வீட்டு மின் இணைப்பாளர்
பட்டயம், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பட்டயம், வீட்டு உபயோகப் பொருட்கள்
பழுது பார்த்தல் பட்டயம், போன்ற படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இக்கல்லூரிகளில், முழு நேர வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ்
பாஸ் வழங்க, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதற்காக, 1.68 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 6,000 மாணவர் பயன் பெறுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...