பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் 6
ஆயிரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 அரசு உயர்நிலைப்பள்ளிகள்,
10 ஆயிரம் அரசு நடுநிலைப்பள்ளிகள், 35 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை
பார்க்கிறார்கள்.
ஒரு கோடியே 50 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.
மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளில் குறிப்பாக அரசு
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெயிலாகக்கூடாது என்பதில் கண்ணும்
கருத்துமாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளனர். அதற்காக சிறப்பு
வகுப்புகள் காலை அல்லது மாலையில் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படுகிறது.
கல்வித்துறையை மேம்படுத்த முதல்– அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பு
திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
தற்போது ஆசிரியர் பயிற்சி மற்றும்
கல்வி ஆராய்ச்சி நிறுவனம் ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட
பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அதன்படி
மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பித்தால் மாணவர்கள் மனதில் நிலைத்து
நிற்கும்? புரிந்து படிக்க என்ன செய்யலாம்? புதிய தொழில்நுட்பத்தில் எப்படி
பாடம் நடத்தலாம்? ஆங்கிலத்தில் இலக்கணத்துடன் எப்படி பேச வைக்கலாம்?
இலக்கணம் இன்றி பேச்சு வழக்கில் எப்படி பேச வைக்கலாம்? என்பது குறித்து
பல்வேறு தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி சென்னை நுங்கம்பாக்கம்
டி.பி.ஐ.வளாகத்தில் தொடங்கியது.
இந்த பயிற்சி முகாமில் மாவட்ட
ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 90 பேர் கலந்துகொண்டனர்.
பயிற்சி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பயிற்சி பெறும் இவர்கள் அந்தந்த
மாவட்டத்திற்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி
பெற்ற பின்னர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிப்பார்கள்.
GOVERNMENT IS TAKING STEP TO IMPROVE EDUCATION THRO TECHNOLOGY BUT THE REALITY IS WHEN U R INTRODUCING TECHNOLOGY UR PRESENTATION IS NOT CONSIDERED.I HAVE PRESENTED A GOOGLE ONLINE TEST WHICH IS USEFUL FOR TEACHERS IN DISTRICT SCIENCE EXHIBITION.MY PRESENTATION WAS NOT EVEN SEEN BY THE JUDGES WHO ARE COLLEGE LECTURERS.AS USUAL THERMOCOL MODEL FROM A TEACHER GOT THE PRIZE
ReplyDelete