மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இலவச பொருட்களை பெற, ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு,
தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர், மாவட்ட தலைநகருக்கு செல்ல
வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி, மாணவர்களின் கல்வி
பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம்
சார்பில், அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான, இலவச பொருட்களை, பள்ளிகளிலேயே
நேரடியாக இறக்கி, தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
"இப்பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுக்கு ஒரு நல்ல ஜடியா உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு ஸ்கீம் பி.டி.ஒ பதவி உள்ளது.இந்த அதிகாரி மூலம் சத்துணவு ,முட்டை, லாரி வழியாக பள்ளிக்கு வருவதை போல அரசின் 14 திட்டத்தை பி,டி,ஒ க்கள் மூலம் ஒப்படைத்து அனுப்புவது சால சிறந்தது. ஆனால் ..........வராது.
ReplyDeleteஒன்றிய தலைமையிட பள்ளிகள் மூலம் வழங்க முயற்சி செய்யலாம்.....
ReplyDelete