அரசு அதிகாரிகளின் உறவினர்கள், தேர்தலில் போட்டியிட்டால், அந்த
தொகுதிக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை
செல்லக்கூடாது' என, தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரசேதம், சத்தீஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில், சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த, ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், தேர்தல் நடத்தை விதி, கடந்த, 4ம் தேதியில் இருந்து, அமலுக்கு வந்துள்ளது.
வட மாநிலங்களில், அரசு அதிகாரிகளின் மனைவி
மற்றும் உறவினர்கள், தேர்தலில் போட்டியிடுவது, அதிகமாக உள்ளது. அந்தத்
தொகுதிகளில், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், தேர்தல் பணியாற்ற செல்வர்.
இதை தவிர்க்க, அரசு அதிகாரிகளின் உறவினர்கள் தேர்தலில் போட்டியிட்டால்,
அந்தத் தொகுதிக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, தேர்தல் முடியும் வரை
செல்லக்கூடாது என, தேர்தல் கமிஷன் புதிய விதிமுறையை, தற்போது அமல்படுத்தி
உள்ளது. இவ்விதி, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட பகுதிகளில்
அமல்படுத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...