இதயத்திற்கு
இதமான பொருட்களின் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது. திராட்சை
பழச்சாறு. அமெரிக்க இதயநோய் நிபுணரான ஜான்ஃபோல்ட்ஸ் என்பவர் திராட்சை
பழச்சாறுக்கு, ரத்தம் உறைதலைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாகக்
கண்டறிந்துள்ளார்.
பொதுவாக மாரடைப்பால் மரணம் ஏற்படுவதற்கும்
இதயக் குழாய்களில் ரத்தம் உறைதலே காரணம். ரத்தம் உறையாமல் இருக்க,
'பிளாவனாய்டு' என்ற வேதிப்பொருள் உதவுகிறது.
ரத்தத் தட்டுகள் ஒன்று சேருவதை பிளாவனாய்டு
தடுப்பதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே தான் பிளாவனாய்டு கலந்த
ஆஸ்பிரின், இதய நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இத்தகைய உயிர்காக்கும்
பிளாவனாய்டுகள் திராட்சையில் ஏராளமாக உள்ளதால், மாரடைப்பு மற்றும் பிறஇதய
நோய்களைத் தடுப்பதில் திராட்சை பெரும் பங்காற்றுமென ஜான்ஃபோல்ட்ஸ்
தெரிவிக்கிறார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...