"இளம் வனவிலங்கு போட்டோகிராபர்" விருதுக்கு, இந்தியாவைச் சேர்ந்த சிறுவன், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, உதயன் ராவ் பவார், 14.
அம்மாநிலத்தில் உள்ள, சம்பல் நதியில், தாய் முதலையின் தலை மீது, பயணம்
செய்யும் குட்டி முதலைகளைப் படம் பிடித்துள்ளார். இந்தக் காட்சியை படம்
பிடிப்பதற்காக, இரவு முழுவதும், சம்பல் நதிக் கரையில் உள்ள, பாறையின்
பின்னால் மறைந்திருந்து, அதிகாலை சூரிய உதயத்தின் போது, இக்காட்சியை படம்
எடுத்ததாக, பவார் கூறியுள்ளார்.
'நான் அந்த முதலையை அழைத்தபோது, என்னைக் கவனித்த தாய் முதலை,
வேகமாக, நதிக்கரை அருகில் வந்து, தன் குட்டிகளை சரிபார்த்தது; சில குட்டி
முதலைகள், தண்ணீரில் நீந்தி, தாயின் தலை மீது ஏறியது; பின்னர், தாய் முதலை
பாதுகாப்பாக, தண்ணீருக்குள் அழைத்துச் சென்றது" என்று கூறியுள்ளார்.
நன்னீரில் வசிக்கும் முதலைகள், மணல் திருட்டு மற்றும் சட்ட விரோத
மீன்பிடி தொழிலால், பெருமளவில் அழிந்து விட்டன. தற்போது, 200 ஜோடி முதலைகள்
மட்டுமே உயிருடன் இருக்கின்றன. &'&'பவார் எடுத்துள்ள படத்தின்
நேரம் மற்றும் கலவை மிக நன்றாக உள்ளது. தாய் முதலையின் கண்களில், பயம்
கலந்த பார்வையால், "எங்களை வாழ விடுங்கள்; அமைதியாக வாழ விடுங்கள்" என்ற
கெஞ்சல் தெரிகிறது" என தாவர ஆய்வாளரும், வனவிலங்கு போட்டோகிராபரும்,
தேர்வுக் கமிட்டி நடுவருமான, டுய் டி ராய் புகழ்ந்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...