கேரளாவில், 10க்கும் குறைவான மாணவர்களை உடைய,
அரசு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அரசு
பள்ளிகளில், மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதால், அரசுக்கு நிதி
இழப்பு ஏற்படுகிறது. அதனால், மாநிலத்தில் குழந்தைகள் இல்லா பள்ளிகளை மூட,
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 12 பள்ளிகள்
மூடப்பட்டன.
கல்வி அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 143
பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே இருப்பது தெரியவந்தது. உடன்,
இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சு வேளி ரயில்
நிலையம் அருகேயுள்ள, ஜி.எல்.பி., பள்ளி இந்த கல்வியாண்டு முதல்
மூடப்பட்டது. இங்கு பயின்ற மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் அருகில் உள்ள
பள்ளிகளுக்கு மாற்றப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வேறு சில பள்ளிகளும்
மூடப்பட்டன. மீதி பள்ளிகளை மூடுவது தொடர்பாக, வரும், 28ம் தேதி நடைபெறும் ,
மாநில கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...