முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் பிழையான தமிழ்க் கேள்வித் தாளில் மறு தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 21.7.2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் தேர்வை மாநிலம் முழுதும் 32 ஆயிரம் பேர் எழுதினர்.
இதில் சுமார் 8 ஆயிரம் பேர் வரை குரூப் பி-யில்
பிழையான கேள்வித் தாள் இருந்ததாகவும், அதில் 40 மதிப்பெண்கள் வரை இருந்த
பிழையான கேள்வித் தாளால் தங்கள் வாய்ப்பு பறிபோனதாகவும் கூறி, இதற்காக மறு
தேர்வு நடத்த வேண்டும், அல்லது முழு மதிப்பெண் இதற்கு வழங்க வேண்டும் என்று
வலியுறுத்தி மதுரை கோ.புதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.,
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடைபெற்று
வந்தது.இதில், மறு தேர்வு நடத்த செவ்வாய்க் கிழமை இன்று நீதிபதி
உத்தரவிட்டார்.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் சோமையாஜி,மறு
தேர்வு நடத்த கால அவகாசத்துடன் நேரம் அதிகமாகும் என்பதால், 40 மதிப்பெண்களை
நீக்கி விட்டு மீதத்துக்கு கணக்கில் கொள்ளலாம் என்றும், அல்லது 40
மதிப்பெண்களை போனஸ் மதிப்பெண்ணாகக் கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.
ஆனால் இந்த ஆலோசனைகளை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
4 மாதிரி பிரிவு வினாத்தாள் தயாரிக்கப்பட்டது, இதில்1 பிரிவில் மட்டுமே
பிழையான வினாத்தாள் இருந்துள்ளது. இந்த வினாத்தாள் அனைத்துமே பிழை என்றால்
அரசின் பரிந்துரைகளை ஏற்கலாம் ஆனால் ஒருபிரிவு மாணவர்களுக்கு மட்டுமே
என்பதால் பாதிப்புகணக்கிடப் படும்.
எனவே, இந்த உத்தரவு கிடைத்த 6 வாரங்களுக்குள் மறு தேர்வு நடத்த
வேண்டும்.இதற்காக, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய நுழைவுச் சீட்டையே
பயன்படுத்திக் கொள்ளலாம்; அல்லது அதனை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து
பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய விண்ணப்பமும் பெறத் தேவையில்லை என்றார்
நீதிபதி.
விதியின் கொடுமை இந்த மறு தேர்வு
ReplyDeleteமிக பயனுள்ள தீர்ப்பு.
ReplyDeletemaths cutoff sir?
ReplyDeletephysics bc expected cutoff mark sir?
ReplyDeleteRespected sir,
ReplyDeletepls contuct TET retest
How many vacancy will be there for english in TET paper2...any idea?
ReplyDeletemy opinion if wrong or right
ReplyDeleteEXAM YALUTHIYAVARGAL POST GRADUATE TAMIL TEACHERS.FUTURE LA STUDENTS KU TAMIL LA YALUTHUU PILAIGALA THIRUTHUVATHARKU PRACTICE KODUKKA PORAVANGA. APPADI IRUKUM POTHU AVANGA QUESTION PAPER LA IRUKURA YALUTHU PILAIKALA KANDIPPA PADIKUM POTHU SARI SENJURUPANGA.. MEENDUM ORU MURAI VAALKAI PORATTAM,, INTHA MURAI SELECT AGIRUPOM NU NINAI THAVARGAL MANA URUTHIYODU PADIYUNGAL. BEST WISHES ..
சென்ற ஆண்டும் தாவரவியல் பாடத்திற்க்கு டி.ஆர்.பி அநீதி இழைத்துள்ளது
ReplyDeleteதிருச்சியில்ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
ReplyDeleteதிருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஒருங்கிணப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். உண்ணாவிரத்தை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபு தொடக்கிவைத்தார்.
உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு என்டிவிடி 2001 விதியின்படி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.